ETV Bharat / bharat

'எல்லையற்ற போருக்கு இந்தியா தயாராக வேண்டும்' - ராகுல் காந்தி

டெல்லி : "வரும் காலத்தில் எல்லை இல்லாத போருக்கு, இந்தியா தன்னை தயார்ப்படுத்த வேண்டும்" என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul
ராகுல் காந்தி
author img

By

Published : Mar 9, 2021, 3:35 PM IST

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. எல்லையில் இருநாட்டுத் தரப்பிலும் குவிக்கப்பட்ட வீரர்கள், அண்மையில் தான் திரும்பப் பெறப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க, பயங்கரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் உள்ளனர்.

இந்நிலையில், வரும் காலத்தில் எல்லை இல்லாத போருக்கு, இந்தியா தன்னை தயார்ப்படுத்த வேண்டும் எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில், " இந்திய படைகள் எல்லைப் பகுதியில் போரிடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அந்த காலம் மாறிவிட்டது. எல்லை இல்லாத போருக்கு, நாம் தயாராக வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையற்ற போர் என்று, மறைமுகமாக சைபர் தாக்குதலைத்தான் அவர் கூறுகிறார். தற்போதைய, டிஜிட்டல் உலகில் சைபர் தாக்குதல் அதிகளவில் நடைபெறுகிறது. ஹேக்கர்ஸ்களின் தாக்குதலைச் சமாளிப்பது, சைபர் கிரைம் பிரிவினருக்குச் சவால் நிறைந்த பணியாக உள்ளது. ஏற்கனவே, இந்தியா சீனாவின் செயலிகளுக்கு தடை விதித்தது, டிஜிட்டல் போரின் தொடக்கமாகவே பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 'சர்வதேச ஆண்கள் நாளும் கொண்டாடப்பட வேண்டும்' - பாஜக பெண் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.