ETV Bharat / bharat

விண்ணில் பாயத் தயார் நிலையில் ''சந்திரயான் -3'' - கடைசி 'திக் திக்' நிமிடங்கள்!

நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்திற்கான இந்தியாவின் திறனை நிரூபிக்கும் வகையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று (ஜுலை 14ஆம் தேதி) பிற்பகல் 02.35 மணிக்கு, சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக, விண்ணில் ஏவப்பட உள்ளது.

India Moon Mission Chandrayaan three to lift off at 2.35 pm today
விண்ணில் பாயத் தயார் நிலையில் “சந்திரயான் -3” - கடைசி ‘திக் திக்’ நிமிடங்கள்!
author img

By

Published : Jul 14, 2023, 12:37 PM IST

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் (ஆந்திரப் பிரதேசம்) : இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரப் பிரதேசம், சூலூர்பேட்டை அருகில் உள்ள இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜுலை 14ஆம் தேதி) பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான் 2 திட்டம் இந்தியர்களின் இதயத்தை மட்டுமின்றி, உலகம் முழுக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கனவுகளையும் தகர்த்து எறிந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.. அந்த முயற்சியில் மட்டும் இந்தியா வென்று இருந்தால் கடந்த 3 வருடங்களில் விண்வெளி துறையில் மாபெரும் சாதனைகளை படைத்து இருக்கும். அப்போது விட்ட வெற்றியை இப்போது பிடிக்க சந்திரயான் - 3 விண்கலத்தை, இந்தியா விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

சந்திரயான்-3 திட்டம் என்பது, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் அங்கு ரோவர் பயணப்படுவதில் இந்தியாவின் இறுதித் திறனை நிரூபிப்பதாய் அமைந்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்திற்கான இந்தியாவின் திறனை நிரூபிப்பது, நிலவில் ரோவர் சவாரி செய்வதை நிரூபிப்பது மற்றும் அவ்டத்திலேயே அறிவியல் சோதனைகளை நடத்துவது உள்ளிட்டவைகள், சந்திரயான்-3 திட்டத்தின் பரந்த பணி நோக்கங்கள் ஆகும்.

சந்திரயான் - 3 விண்கலம் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளதாவது, சந்திரயான்-3 விண்கலம், முழுவதுமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர் மாட்யூல் (LM), ஒரு உந்துவிசை தொகுதி (PM) மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இது வருங்காலத்தில், கோள்களுக்கிடையேயான பயணங்களுக்கு புதிய திறன்களை உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. லேண்டர், நிலவின் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மென்மையாக தரையிறங்குவதற்கும், ரோவரை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுகிறது. இது அதன் இயக்கத்தின் போதே, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வு செய்யும் திறன் பெற்றது.

ஆந்திர மாநிலம் SHAR (ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச்) எனப்படும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஏவுகணை வாகனம் மார்க் 3 (LVM3) மூலம், சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட உள்ளது. இந்தப் பயணத்தின் போது, அதன் உந்துவிசை தொகுதி 100 கி.மீ. வரையிலான நிலவின் சுற்றுப்பாதை வரை லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை கொண்டு செல்லும்.

சந்திரயான் -3 திட்டத்தில், ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) என்ற அமைப்பை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் போலரி மெட்ரிக் அளவீடுகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. மற்றொரு அமைப்பு, மேற்பரப்பின் தெர்மோபிசிகல் பரிசோதனை (ChaSTE) - வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை அளவிட உதவும்.

சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான பிற பேலோட் கருவி (ILSA) தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நில அதிர்வை அளவிடுவதற்கும், Langmuir Probe (LP) அமைப்பு, பிளாஸ்மா அடர்த்தி மற்றும் அதன் மாறுபாடுகளை மதிப்பிடுவதற்கு இடம்பெற்று உள்ளது.

மிஷன் ரோவரின் பேலோட் ஆல்ஃபா பார்ட்டிகல் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) மற்றும் லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) ஆகியவை தரையிறங்கும் தளத்தின் அருகிலுள்ள தனிம கலவையைப் பெறுவதற்காகும். சந்திரயான்-3 மிஷன் நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள அறிவியல் பேலோடுகளை தன்னகத்தே கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திராயன் - 3 குறித்த முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.