டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 795 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 201 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இதனை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 30 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், 179 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 47 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 699 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 87 கோடியே 7 லட்சத்து 8 ஆயிரத்து 636 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் 56 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 31 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (செப். 27) மட்டும் ஒரே நாளில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 780 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: 2ஆவது தவணை; கோவிஷீல்டுக்குப் பதிலாக கோவாக்சின்...!