டெல்லி : கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 581 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் தொடர்பான விவரங்களை ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 806 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 39 ஆயிரத்து 130 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். தற்போதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கடந்த 24 மணி நேரத்தில் 581 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆக, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 11 ஆயிரத்த 899 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இங்கு ஜூலை முதல் வாரத்தில் நூற்றுக்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் புதன்கிழமை (ஜூலை 14) 15 ஆயிரத்து 637 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கரோனா!