நாட்டில் கடந்த ஒருநாளில்(அக்.24) 14 ஆயிரத்து 306 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 35 லட்சத்து 67 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 443 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 54 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று(அக்.24) ஒரே நாளில் 12 லட்சத்து 30 ஆயிரத்து 720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 102 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரத்து 496 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
71 கோடியே 92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசியும், 30 கோடியே 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!