ETV Bharat / bharat

இந்தியா-இத்தாலி இடையே மெய்நிகர் உச்சிமாநாடு! - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே ஆகியோர் இடையேயான மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது.

இந்தியா-இத்தாலி இடையே மெய்நிகர் உச்சிமாநாடு!

author img

By

Published : Nov 5, 2020, 8:21 PM IST

"இரு நாட்டு தலைவர்களிடையே நடைபெறயுள்ள மெய்நிகர் உச்சிமாநாடு, இருதரப்பு உறவுகளின் பரந்த கட்டமைப்பை விரிவாக மதிப்பாய்வு செய்ய வழிவகை செய்யும். மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்படும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தாலியை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக இந்தியா கருதுகிறது, மேலும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மேம்படுத்துவதில் இத்தாலியின் பங்களிப்பிற்கு இந்தியா மதிப்பளிக்கிறது.

இந்தியா- இத்தாலி இடையேயோன வர்த்தகம் 2019ஆம் 9.52 பில்லியன் யூரோவாக இருந்தது. ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி உள்ளது.

ஃபேஷன் மற்றும் ஆடைகள், ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்கள், வாகன பாகங்கள், உள்கட்டமைப்பு, ரசாயனங்கள், எரிசக்தி, காப்பீடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 600 பெரிய இத்தாலிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. பல இந்திய நிறுவனங்களும் இத்தாலியில் செயல்படுகின்றன.

பல அரசு மற்றும் தனியார் துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவை வெள்ளிக்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டின் போது இறுதிசெய்யப்பட்டு கையொழுத்தாகும் என்று வெளியுறுவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும் இத்தாலியும் வரலாற்று ரீதியாக வலுவான உறவை கொண்டுள்ளது. பொதுவான ஜனநாயக மரபுகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பன்முக உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. வரலாற்று தரவுகளின்படி, ​​ரோம் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியரான கார்லோ ஃபார்மிச்சியின் அழைப்பின் பேரில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1926ஆம் ஆண்டு இத்தாலிக்கு விஜயம் செய்தார்.

மகாத்மா காந்தி 1931 ஆம் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ரோம் சென்றார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துடன் பணியாற்றிய இந்திய படையினர், இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலியில் தீவிரமாக செயல்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.