ETV Bharat / bharat

"இந்தியா ஜனநாயகத்தின் மரணத்தை கண்டுவருகிறது" - ராகுல் காந்தி

author img

By

Published : Aug 5, 2022, 1:40 PM IST

இந்தியா ஜனநாயகத்தின் மரணத்தை கண்டு வருவதாகவும், சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்கும் எவரும் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லியில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சமூக வன்முறை அதிகரிப்பு உள்ளிட்டவையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று (ஆக 5) போராட்டம் நடந்தது. அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான அக்கட்சியின் எம்பிக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதனிடையே டெல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ராகுல் காந்தி உள்பட எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, சசி தரூர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "நாட்டில் ஜனநாயகம் கிடையாது. நான்கு பேருடைய சர்வாதிகாரம் மட்டுமே உள்ளது. இந்தியா ஜனநாயகத்தின் மரணத்தை கண்டு வருகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்கும் எவரும் ஆண், பெண் பாரபட்சமின்றி கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள்.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பப்படக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது" என்றார். இதனிடையே காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்னபு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனடாவின் ஆபத்தான குற்றவாளிகள் 11 பேரில் 9 பேர் இந்தியர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.