இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்துசென்ற நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி நாடு முழுவதும் ‘ பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிந்து சென்றது. அந்த நாளை அந்நாட்டு சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. அதேவேளையில், இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளை நினைவுக்கூரும் விதமாக இந்தியாவில் அந்நாள் பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது இந்தியர்களின் துன்பங்கள் மற்றும் தியாகங்களை தேசத்திற்கு நினைவூட்டும் வகையில் இந்த நாள் பிரிவினை பயங்கர நினைவு தினமாக நினைவுகூரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
அதில், “பிரிவினைக் கொடுமைகள் தினமான இன்று #PartitionHorrorsRemembranceDay, பிரிவினையின் போது உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது வரலாற்றில் கொடூரமான காலகட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் நெகிழ்த்தன்மை மற்றும் உறுதியை பாராட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சட்ட உலகில் தனிமுத்திரையைப் பதித்தவர் மூத்த வழக்கறிஞர் நடராஜன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்