டப்ளின் : இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் ட்க்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 20ஆம் தேதி அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்திலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
-
All smiles here in Dublin as #TeamIndia complete a 2-0 T20I series win 😃🙌#IREvIND pic.twitter.com/V9gnBISlXP
— BCCI (@BCCI) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All smiles here in Dublin as #TeamIndia complete a 2-0 T20I series win 😃🙌#IREvIND pic.twitter.com/V9gnBISlXP
— BCCI (@BCCI) August 23, 2023All smiles here in Dublin as #TeamIndia complete a 2-0 T20I series win 😃🙌#IREvIND pic.twitter.com/V9gnBISlXP
— BCCI (@BCCI) August 23, 2023
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று (ஆகஸ்ட். 23) அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற பகுதியில் தொடர் மழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை கொட்டி வந்ததால் டாஸ் கூட போட முடியவில்லை.
நீண்ட நேரம் கடந்தும் வருண பகவான் கருணை காட்டாத நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களை இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.
இதையும் படிங்க : FIDE World cup 2023: இரண்டாம் சுற்றும் டிரா.. நாளை டைபிரேக்கர்