சீன வீரரை திரும்ப ஒப்படைத்த இந்தியா - இந்தியா சீனா லடாக் எல்லை
எல்லைத் தாண்டிவந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் திருப்பி அந்நாட்டினரிடம் ஒப்படைத்துள்ளது.

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள தெற்கு பாங்காங் ஏரி அருகே, சீன ராணுவ வீரர் கடந்த 8ஆம் தேதி தவறாக நுழைந்தார். அவரைப் பிடித்த இந்திய ராணுவத்தினர் தங்கள் காவலில் வைத்து, இந்தத் தகவலை சீன ராணுவத்திடமும் தெரிவித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய ராணுவத்தினர், உரிய நடைமுறைகளுக்குப் பின் அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர். சுசூல் எல்லைப் பகுதியில் உள்ள சீன ராணுவத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து எல்லையில் பதற்றநிலை ஏற்பட இரு நாடுகளும் படைகளைக் குவித்துவைத்துள்ளன.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை 2020: உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய அமைச்சர்!