ETV Bharat / bharat

எல்லை தாண்டிய 577 பேர்: வங்கதேசத்திடம் ஒப்படைத்த இந்தியா

2018ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 577 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

India handed over 577 intruders to B'desh since 2018
எல்லை தாண்டிய 577 பேர்: திரும்பி ஒப்படைத்த இந்தியா
author img

By

Published : Jun 13, 2021, 6:26 PM IST

டெல்லி: இந்திய வங்கதேச எல்லை மிகவும் அமைதியான பன்னாட்டு எல்லையாக கருதப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த சிலர் இதைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வதுண்டு. அவ்வாறு, 2018ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் வரை ஊடுருவிய 577 பேரை இந்திய அரசு வங்கதேச அரசிடம் ஒப்படைத்துள்ளது.

2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தாண்டு மே 1ஆம் தேதி வரையில், மேற்கு வங்கத்தின் வழியாக 480 பேர், திரிபுராவின் வழியாக 71 பேர், மேகாலயா வழியாக 18 பேர், அஸ்ஸாம் வழியாக 8 பேர் என மொத்தம் 577 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர் என அரசாங்கத் தகவல் தெரிவிக்கிறது.

4,096 கி.மீ. எல்லையை இந்தியாவுடன் வங்கதேசம் பகிர்ந்துகொள்கிறது. இருப்பினும், எல்லையை அமைதியாக வைத்திருக்க இரு நாடுகளும் நல்லுறவை பேணிவருகின்றன.

இதையும் படிங்க: கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர்கள்: மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.