ETV Bharat / bharat

ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம்.. சிறப்பம்சங்கள் என்ன? - கோல்டு

ஹைதராபாத்தில் முதன் முதலாக கோல்டு ஏடிஎம் டதொடங்கப்பட்டுள்ளது.

Hyderabad  Gold ATM  Gold ATM in Hyderabad  first Gold ATM in Hyderabad  கோல்டு ஏடிஎம்  முதல் கோல்டு ஏடிஎம்  ஹைதராபாத்தில் முதல் கோல்டு ஏடிஎம்  கோல்டு
கோல்டு ஏடிஎம்
author img

By

Published : Dec 4, 2022, 2:30 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நாட்டிலேயே முதன் முறையாக கோல்டு ஏடிஎம்(Gold ATM) திறக்கப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா மகளிர் ஆணைய தலைவர் சுனிதா லக்ஷ்மரெட்டி திறந்து வைத்தார். இப்போது பயனர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம்மிலிருந்து தூய தங்க நாணயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம், 99.99 சதவீதம் தூய்மையான 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான தங்க நாணயங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுகொள்ள முடியும். மேலும் தங்க நாணயங்களின் தர சான்றிதழும் கிடைக்கும். இந்த கோல்டு ஏடிஎம் 24 மணி நேரமும் செயல்படும் என கோல்டு சிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் தருஜ் தெரிவித்தார்.

மேலும் கோல்டு ஏடிஎம், ஹைதராபாத்தில் உள்ள குல்ஜர் ஹவுஸ், செகந்திராபாத் கரீம்நகர் மற்றும் வாரங்கல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் திரையில் அவ்வப்போது தங்கம் விலை காட்டப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பனந்தோப்பில் கிடைத்த தங்க புதையல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.