டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(ஏப். 21) தெரிவித்துள்ளது. நேற்றை விட இன்று 313 பேர் அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 13 ஆயிரத்து 433 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,231 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 479 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 4,49,114 சோதனைகள் நடத்தப்பட்டன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தியாவில் இதுவரை 83.33 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2.47 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெகுண்டெழும் கோவிட் அலை- 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!