நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. உயிரிழப்பு 278 ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் ஒன்பதாயிரத்து 735 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பு 151 ஆக உள்ளது.
நாடு முழுவதும் தற்போது இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 687 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டின் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 38 லட்சத்து 71 ஆயிரத்து 881ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 49 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாட்டில் இதுவரை 92 கோடியே 17 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 66 கோடியே 95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 25 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்