நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 842 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 38 லட்சத்து 13 ஆயிரத்து 903ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 97.87 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 244 நபர்கள் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 817ஆக அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ் இதுவரை 90.51 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!