கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் நேற்று (ஆகஸ்ட் 24) மட்டும் 37 ஆயிரத்து 593 பேருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 25 லட்சத்து 12 ஆயிரத்து 366ஆக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 648 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதுவரை மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 327ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 34 ஆயிரத்து 169 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை மூன்று கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 281 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் மொத்தமாக இதுவரை 59 கோடியே 55 லட்சத்து நான்காயிரத்து 593 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வருகை