இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 421 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 13) ஒரேநாளில் 14 ஆயிரத்து 16 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 921 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 305ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947ஆக உள்ளது. தற்போதுவரை 9 லட்சத்து 73 ஆயிரத்து 158 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதுவரை, மொத்தமாக 25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்து 301 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.