இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று (மே.30) 3,128 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரத்து 342 ஆக உள்ளது. தற்போது 20 லட்சத்து 26 ஆயிரத்து 92 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 21 கோடியே 31 லட்சத்து 54 ஆயிரத்து 129 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!