உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துவருகிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 84 ஆயிரத்து 100 ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 88 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 94.98 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று (டிசம்பர் 13) மட்டும் 30 ஆயிரத்து 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தமாக 15 கோடியே 45 லட்சம் 66 ஆயிரத்து 990 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிசம்பர் 13) மட்டும் எட்டு லட்சத்து 55 ஆயிரத்து 157 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் ஏழு கோடியே 26 லட்சத்து 18 ஆயிரத்து 543 பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 18 ஆயிரத்து 437 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒரு கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.