புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 361 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 362 ஆக உள்ளது.
மேலும் 35 ஆயிரத்து 968 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 79 ஆயிரத்து 106 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 416 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், நாட்டில் இதுவரை 43 கோடியே 51 லட்சத்து 96 ஆயிரத்து 001 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25 வரை மொத்தம் 45 கோடியே 74 லட்சத்து 44 ஆயிரத்து 011 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 444 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.