ஹைதராபாத் : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவர விவரங்களை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 8 மணிக்கு வெளியிட்டது.
அதில், “கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 164 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 449 பேர் மரணித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 14 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 665 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 660 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 40 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 493 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், “ஜூலை 18ஆம் தேதி வரைக்குள் நாடு முழுக்க 44 கோடியே 54 லட்சத்து 22 ஆயிரத்து 256 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) ஒரு நாளில் மட்டும் 14 லட்சத்து 63 ஆயிரத்து 593 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி