டெல்லி: இந்தியாவின் கோவிட் நிலவரம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 ஆயிரத்து 113 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு நான்கு கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் 346 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 11 ஆக உள்ளது. நாட்டில் தற்போது நான்கு லட்சத்து 78 ஆயிரத்து 882 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 930 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 172.95 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும், இதுவரை 75.18 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நேற்று (பிப். 13) மட்டும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 908 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் 54 சீன செயலிகளுக்குத் தடை