ETV Bharat / bharat

இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை கூர்ந்து கவனித்துவருகிறோம்: வெளியுறவுத்துறை

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையேயான மோதல் போக்கை கூர்ந்து கவனித்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MEA
MEA
author img

By

Published : May 21, 2021, 8:19 AM IST

வெளியுறவுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி நேற்று (மே 20) செய்தியாளர்களிடம், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் பூசல் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது," இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தி அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

மத்திய கிழக்கு பிரந்தியம் இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனின் அரசு முழு அக்கறை கொண்டுள்ளது. இஸ்ரேல்-பாலன்தீன் விவகாரம் ஐநா பொதுச்சபைக்கு விவாதத்திற்கு வரும் போது, இந்தியா தனது நிலைபாட்டை வெளிப்படுத்தும். மத்திய கிழக்கின் நிலவரத்தை இந்தியா கூர்ந்து நோக்கி வருகிறது என்றார்.

இஸ்ரேல்-பாலன்தீன் எல்லைப் பகுதியான காசாவில் ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் போர் தாக்குதலில், இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பும் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என, ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் அடைக்கலம் புகுந்த 52,000 பாலஸ்தீனியர்கள் : ஐநா அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.