இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கரோனா நோயாளிகள் படுக்கை இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைக் கடுமையாகச் சாடிய அவர், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பாா்வைதான் மத்திய அரசுக்கு அவசியம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கும் வண்ணம், அதனை இலவசமாக வழங்க அறிவுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இலவசம் என்பதற்கு, 'விலையில்லா அல்லது பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை' என்ற விளக்கத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
உதாரணமாக...
• 'இந்திய மக்களுக்கு கட்டாயமாக கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.
• அனைத்து குடிமக்களுக்கும் விலையில்லா கரோனா தடுப்பூசி கட்டாயம் கிடைக்க வேண்டும்.
இந்த நேரத்தில், அவர்கள் இதைப் பெறுவார்கள் என்று நம்புவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.