ETV Bharat / bharat

ராஜஸ்தானில் பாஜகவை திரும்பி பார்க்கச் செய்த சுயேட்சை போட்டியாளர்! - independent candidates in rajasthan election

5 மாநில தேர்தல்கள் முடிவுபெற்ற நிலையில், 4 மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜகவில் இருந்து வெளியேறி போட்டியிட்ட சுயேட்சை போட்டியாளர்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ராஜஸ்தானில் பாஜகவை திரும்பி பார்க்கச் செய்த சுயேட்சை போட்டியாளர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 8:07 PM IST

ஹைதராபாத்: ராஜஸ்தான் - 199 தொகுதி: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கடந்த நவ.25ஆம் தேதி நடைபெற்று இன்று(டிச.3) அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 5.3 கோடி வாக்காளர்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 இடங்களும், பழங்குடியினருக்கு 34 இடங்களும், பொது பிரிவினருக்கு 141 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

தேர்த்ல் நடந்த 199 தொகுதிகளில் மொத்தம் 1,862 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், பாஜக - 115 இடங்களிலும், காங்கிரஸ் - 68 இடங்களிலும், பிஎஸ்பி - 3 இடங்களிலும், சுயேட்சை - 12 இடங்களையும் பிடித்து பாஜக முன்னிலை வகுத்து வருகிறது. இந்த விகிதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கையில், பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018/2023 - ஒப்பீடு:

கட்சி20182023
பாஜக 73 115
காங்கிரஸ் 100 68
பகுஜன் சமாஜ் கட்சி 6 3
மற்றவை 21 12

தற்போதைய வாக்கு நிலவரம்:

பாஜக - 115

காங்கிரஸ் - 68

பகுஜன் சமாஜ் கட்சி - 2

பாரத ஆதிவாசி கட்சி - 3

ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி(ஆர்எல்பி) -2

சிபிஐ(எம்), ராஷ்ட்ரிய லோக் தள்(ஆர்எல்டி) - 1

சுயேட்சைகள் -8

கட்சிஇடங்கள்
பாஜக 115
காங்கிரஸ் 68
பாரத ஆதிவாசி கட்சி 3
பகுஜன் சமாஜ் கட்சி 2
ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி(ஆர்எல்பி) 2
சிபிஐ(எம்) 1
ராஷ்ட்ரிய லோக் தள்(ஆர்எல்டி) 1
சுயேட்சைகள் 8

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை திரும்பி பார்க்க வைத்த சுயேட்சைகள்: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 8 சுயேட்சைகளில் 4 பேர் பாஜக சார்பில் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் ஆவர். வாய்ப்பு மறுக்கப்பட்ட சுயேட்சைகள் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசை ஆட்டன் காணச் செய்து உள்ளனர்.

பாஜகவில் இருந்து பிரிந்து சுயேட்சையாக போட்டியிட்டவர்கள்:

வேட்பாளர் தொகுதி
கணேஷ்ராஜ் பன்சால்ஹனுமன்கர்க்
பிரபுதயாள் சரஸ்வத் லுங்கரன்சர்
முக்த்யார் அஹ்மத் கமான்
ரிது பனாவத் பயனா
யூனுஸ் கான் - 40.13%(வெற்றி) தீத்வானா
ரவீந்திர சிங் பதி - 38.81(%வெற்றி) ஷியோ
பிரியங்கா சவுத்ரி - 45.76% (தோல்வி) பார்மர்
சந்திரபான் சிங் சௌஹான் - 45.36%(வெற்றி) சித்தூர்கர்
அசோக் குமார் பில்வாரா

தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தானில் சுயேட்சை வேட்பாளர்கள் கணிசமாக வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ரவிந்தர சிங் பதி, ஷியோ சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 38.81% அதிகபட்ச வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஒரு யோகி - யார் இந்த மகந்த் பாலக்நாத்? முதலமைச்சராவாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.