ETV Bharat / bharat

தேஜ கூட்டணி: சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி: பாஜக கூட்டணியில் கட்சிக்கு எதிராகச் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜக கூட்டணி
தேஜ கூட்டணி
author img

By

Published : Mar 23, 2021, 7:03 PM IST

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜகவுக்கு 9, அதிமுகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. பின்னர் அந்தந்தக் கட்சிகள் அறிவித்த தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல்செய்து பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தனர். அதேபோல் பாஜக வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில், தங்களுக்குச் சீட்டு ஒதுக்கப்படாத அதிருப்தியாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தனர்.

இதனால், இரு கட்சித் தலைமைகளும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தவர்கள் அதனைத் திரும்பப் பெற மறுப்புத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

candidates
சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை

இது குறித்து புதுச்சேரி பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏனாம் தொகுதி தலைவர் துர்கா பிரசாத், வல்லுநர் பிரிவின் அமைப்பாளர் பிரபா தேவி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நான்கு பேரும், கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தல்படியும், மாநிலத் தலைவர் சுவாமிநாதன் ஆலோசனைப்படியும், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறாண்டுகள் நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

இதேபோல, காரைக்காலில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல்செய்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பி.ஆர். சிவா, புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி பிரகாஷ் குமார், உருளையன்பேட்டை தொகுதி நேரு ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்செய்யப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.