ETV Bharat / bharat

காங்கிரஸ் எம்எல்ஏ-விடமிருந்து மேலும் ரூ.450 கோடியை கைப்பற்றிய வருமான வரித்துறையினர் - மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலேயா

மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலேயா தேகாவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 450 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

income-tax-department-raid-ongoing-on-congress-mla-nilay-dagas-bases

author img

By

Published : Feb 24, 2021, 9:38 AM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பீடல் சட்டப்பேரவை உறுப்பினர் நிலேயா தேகா. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சொந்தக்காரரனா இவருக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்பிலான சொத்துகளை கையாளுவதற்கான ஆதாரங்கள் சிக்கின. மேலும், அவர் ஹவாலா பணத்தை நிர்வகிப்பதற்கான சில ஆதரங்களும் கிடைத்துள்ளன என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.450 கோடிக்கும் அதிகமான சொத்துகளை பணமாகவும், ஆவணங்களாகவும் அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். அவருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட 9 லாக்கர்கள், ரூ.8 கோடி பணம், ரூ.44 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் ஆகியவை குறித்த ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, நிலேய் தேகா சுமார் 250 மில்லியன் (25 கோடி) மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருவதாகவும், அவருக்கு கணக்கில் காட்டப்படாத பல நிறுவனங்களில் பங்கு இருப்பதாகவும், அதில் பெரும்பாலான நிறுவனங்கள் கொல்கத்தாவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவரது சகோதரர் 24 நிறுவனங்களை நடத்திவருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து 24 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.100 கோடி பணப்பரிவர்த்தணை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் இந்த சொத்துகள் குறித்தும், ஹவாலா பணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.