ETV Bharat / bharat

அஜய் தேவ்கனின் 'தேங் காட்' படத்தை தடை செய்ய வேண்டும் - ம.பி., அமைச்சர் கடிதம் - அனுரக் தாகூர்

விரைவில் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் ‘தேங் காட்’ திரைப்படம் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவதாகவும் அதைத்தடை செய்யவேண்டுமெனவும் மத்தியப்பிரதேச கல்வி அமைச்சர் விஸ்வாஷ் சாரங் கடிதம் எழுதியுள்ளார்.

அஜய் தேவ்கனின் ‘தேங் காட்’ படத்தை தடை செய்ய வேண்டும் - கல்வி அமைச்சர் கடிதம்

author img

By

Published : Sep 21, 2022, 3:13 PM IST

மத்தியப்பிரதேசம்(போபால்): மத்தியப்பிரதேசத்தின் கல்வி அமைச்சர் விஸ்வாஷ் சாரங் நேற்று(செப்.20) ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில், விரைவில் வெளிவரவிருக்கும் நடிகர் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள ‘தேங் காட்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரியுள்ளார்.

அதில், விரைவில் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் ‘தேங் காட்’ திரைப்படத்தில் இந்துக்களை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் இந்திர குமார் இயக்கத்தில் நடிகர்கள் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தேங் காட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஓர் எதிர்பாராத விபத்தில் சாவை எட்டிய ஒருவன், மேலுலகம் சென்று அங்குள்ள சித்ரகுப்தனின் புதிர் விளையாட்டுகளில் வென்று தப்பிப்பதே இந்தப் படத்தின் கதை எனத் தெரிகிறது. மேலும், இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அப்படக்குழுவினரால் திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.