நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அந்த வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக, உத்தரப் பிரதேச மாநிலம் புதுமையான நடவடிக்கையினை கையாண்டுள்ளது.
அதன்படி, எட்டாவா மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுபானக்கடை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, இது தொடர்பாக முறையாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மாணவிக்குப் பாலியல் தொல்லை: கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது!