ETV Bharat / bharat

தனது ஐந்து குடும்பத்தாரை தீயிட்டுக் கொளுத்திய நபர் தானும் தற்கொலை..! - மனைவியைக் கொன்ற கணவர்

பஞ்சாபில் ஒருவர் தன் மனைவி, குழந்தைகள், மாமியார் என அனைவரையும் எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஐந்து குடும்பத்தாரை தீயிட்டுக் கொளுத்திய நபர் தூக்கிட்டு தற்கொலை...!

author img

By

Published : Oct 20, 2022, 9:32 AM IST

பஞ்சாப்: ஒருவர் தன் மனைவி, குழந்தைகள், மாமியார் என அனைவரையும் எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது. கலு (எ) குல்தீப் என்ம்பவர், பரம்ஜித் கவுர் என்றப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். பரம்ஹ்ஜித் கவுருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்களுக்கு திருமணமான போதே பரம்ஜித் கவுருக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன.

இந்நிலையில், குல்தீபிற்கு பரம்ஜித்தின் குழந்தைகளை வைத்துக் கொள்ள விருப்பமில்லை. இதனால் ஆரம்பத்திலிருந்தே குல்தீபிற்கும், பரம்ஜித் கவுருக்கும் இக்குழந்தைகளால் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மது உள்ளிட்டப் போதை பழக்கங்களுக்கு அடிமையான குல்தீப் தினந்தோறும் தனது மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதனால், மனமுடைந்த பரம்ஜித், ஜலந்தாரின் மேஹ்ட்பூர் பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். குல்தீப் பல முறை வீட்டிற்கு திரும்பி வரும்படி அழைத்தும், அதற்கு பரம்ஜித் செவி சாய்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த குல்தீப் தனது கூட்டாளி குல்விந்தர் என்பவருடன் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று அங்குள்ள தன் மனைவி, இரண்டு குழந்தைகள், மாமியார் என எல்லோரையும் வீட்டிற்குள் வைத்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்த ஜலந்தார் போலீசார் அவரது கூட்டாளியான குல்விந்தரை கடந்த அக்.28 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து முக்கிய குற்றவாளியான குல்தீபை, போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று (அக்.19) சித்வான் கிராமத்தில் தற்கொலை செய்தபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திரீ- இன் - ஒன் சந்திரன் என்ற ஹிப்பி சந்திரன்:மூன்று இசைக்கருவிகளை வாசிக்கும் வித்தகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.