ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் சீல்! - மதிய உணவுத்திட்டத்தில் சீல் வைக்கப்பட்ட முட்டை

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளை வெளிச் சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்காக புதுச்சேரி அரசு ''புதுச்சேரி மதிய உணவுத்திட்டம்" (MDM-PDY) என்ற சீல் வைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 17, 2023, 8:00 PM IST

புதுச்சேரி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் சீல் வைத்து விநியோகம்

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவை பெங்களூரைச் சேர்ந்த சைவ தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டை மட்டும் அரசின் சமையல் கூடத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன் முட்டை வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று (ஜூலை 17) முதல் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பணி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள 293 அரசு பள்ளிகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் என சுழற்சி முறையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இவை குருசுகுப்பம், ஏம்பலம், கலீத்தீர்தாள்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற முட்டை தரம் சோதித்த பிறகு சீல் வைக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு அனுப்பப்படுகின்ற முட்டைகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை தடுப்பதற்காக முட்டையின் மேல் சீல் வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. "புதுச்சேரி மதிய உணவுத்திட்டம்" (MDM-PDY) என்ற சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க: Bastille Day: பிரான்ஸ் தேசிய தினம்: பட்டாசு வெடித்ததில் வேடிக்கை பார்த்தவர்கள் காயம்!

இதனிடையே புதுச்சேரி குருசுகுப்பம் சென்ட்ரல் கிச்சனில் முட்டை சமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மதிய உணவு திட்ட அதிகாரி கொஞ்சி மொழி குமரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு முட்டைகளை வாகனங்களில் ஏற்றி அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மானவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என இந்த ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்த, அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா; மேலாளர் தலைமறைவு.. புதுச்சேரி போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.