ETV Bharat / bharat

ஒடிசா: மூன்றாம் பாலினத்தவருக்கு காவல்துறை பணிக்கான அழைப்பு

புவனேசுவர்: ஒடிசா மாநிலத்தில் காவல்துறை பணியில் சேர மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் மூன்றாம் பாலினத்தவர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒடிசாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு போலீஸ் வேலை!

author img

By

Published : Jun 13, 2021, 12:12 PM IST

ஒடிசா மாநிலத்தில் 477 உதவி ஆய்வாளர், 244 தகவல் தொடர்பு காவல் துறையினர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

அப்பணிகளுக்கு ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

காவல் துறை பதவிக்கு மூன்றாம் பாலினத்தவர்களை அழைத்திருக்கும் இம்முடிவை ஒடிசா டிரான்ஸ்ஜெண்டர் நலச் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் மீரா பரிடா கூறியதாவது, "மூன்றாம் பாலினத்தவர்களின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்தமைக்காக முதலமைச்சர், உள்துறைக்கு நன்றி.

இந்த நடவடிக்கை அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தங்கள் மீது இந்த சமூகம் வைத்துள்ள எண்ணங்களையும் மாற்ற பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.