பிகாரில் உள்ள மதேபூரா என்ற பகுதி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தனது இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த காட்டுப் பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சித்துள்ளனர்.
சுதாரித்த அந்த பெண்மணி கூச்சலிட அருகே இருந்த கிராமத்தினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். உடனே அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த பெண் மற்றொரு நபருடன் தவறான முறையில் இருந்ததாகவும், அதை தாங்கள் கண்டுபிடித்து தடுத்தவுடன் அந்த நபர் தப்பியோடியதாகவும், பெண் மட்டும் மாட்டிக்கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞர்களின் புகாரை கேட்ட கிராமத்தினர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பெண் இளைஞர்கள்தான் தன்னிடம் அத்துமீறியதாக புகார் அளிக்கவே, ஆத்திரத்தில் அந்த இளைஞர்கள் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் உடைகளை களைத்து துன்புறுத்தியுள்ளனர்.
விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, காவல்துறை சம்பவயிடத்திற்கு வந்து அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவலம்