1. அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் நேற்று(ஜன.20) பதவியேற்று கொண்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தங்களது அலுவலகப் பணிகளைத் தொடங்கினர்.
2. சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
3.பேரறிவாளன் வழக்கு விசாரணை
பேரறிவாளனின் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
4. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உச்ச நீதிமன்ற நியமித்த குழு
மத்திய அரசு, விவசாயிகளுடன் மத்தியஸ்த பேச்சு நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்த குழு இன்று முதல் மாநில அரசுகள், விவசாயிகளுடன் பேச்சு நடத்தவுள்ளது.
5. விண்வெளிக்குப் பெண் குரங்கு பயணமான நாள்
கடந்த 1960 ஆம் ஆண்டு, ஜனவரி 21இல் சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்குப் பயணமானது.