கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொது மக்கள் சமாளிக்க வழிவகுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணையை செலுத்த ஆறு (2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் வரை அவகாசத்தை நீட்டித்து சலுகை வழங்கியது.
இந்த ஆறு மாதத் தவணைக் காலத்தில் வட்டிக்கான வட்டித் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் ”இரண்டு கோடி ரூபாய்க்கும் கீழ் கடன் பெற்றவர்கள் மேற்கண்ட ஆறு மாத காலத்திற்கு தவணைக்கான வட்டிக்கான வட்டித் தொகையை செலுத்த வேண்டியதில்லை, அதற்குத் தளர்வு அளிக்கப்படும்” என நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இந்நிலையில், இந்தச் சலுகை தனக்கு கிடைக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் கஜேந்திர சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஐசிஐசிஐ வங்கியில் தான் வீட்டுக் கடனாக 37.48 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக தனக்கு வருவாய் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிள்ளார்
அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர் ஷா ஆகியோ அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், ”கோவிட்-19 பாதிப்பு உடல்நலம் தாண்டி மக்களை பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.
எனவே மத்திய அரசின் சலுகை அறிவிப்பு, மக்களுக்கு முறையாக சென்று சேரும் விதமாக விரைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறந்த தலைவருக்கான வோக் இதழின் விருதை வென்ற கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!