ETV Bharat / bharat

"உலக பொருளாதாரத்தை நிர்வகிக்கும் இந்தியா, சீனா" - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்!

உலக பொருளாதார வளர்ச்சியில் பாதியை இந்தியா மற்றும் சீனா கொண்டு இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

Kristalina Georgieva
Kristalina Georgieva
author img

By

Published : Apr 7, 2023, 1:22 PM IST

வாஷிங்டன் : 2023 ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உலக பொருளாதார வளர்ச்சியில் பாதியை சீனா மற்றும் இந்தியா கொண்டு இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார்.

கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் மந்த நிலையில், நடப்பாண்டிலும் தொடரும் என கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். பொருளாதார மந்த நிலை மற்றும் ஆமை வேக பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டிலும் நீடிக்கும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படும் என்றும அவர் கூறினார்.

இந்த பொருளாதார மந்த நிலை கடந்த 1990 ஆம் அண்டுக்கு பிறகு கணக்கிடப்பட்ட குறைந்த நடுத்தர கால வளர்ச்சி என்றும், அதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் 3 புள்ளி 8 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உலக பொருளாதார மந்தநிலை சுழன்றுக் கொண்டு இருந்ததாக கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஆசிய நாடுகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் கூறினார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதி பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

கரோனா பெருந்தொற்றுக்கு பின் 2021 ஆம் ஆண்டு சீரிய முறையில் சென்று கொண்டு இருந்த உலக பொருளாதாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கும் கீழாக குறைந்ததாக கூறினார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 6 புள்ளி 1 என்ற அளவில் இருந்து 3 புள்ளி 4 என குறைந்ததாக அவர் கூறினார்.

உலக பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பேரடியாக இருக்கப் போவதாக தெரிவித்தார். கரோனாவுக்கு பின் உலகளாவிய வறுமை மற்றும் பட்டினி அதிகரித்து உள்ளதாக கூறினார். அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பொருளாதார சுணக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அலோசிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும், 90 சதவீத முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதங்களில் சரிவைக் காணும் என கணிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : Bandi Sanjay Released : வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.