டெல்லி : உத்தரகாண்ட், பஞ்சாப், சண்டிகர், ஹரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 12) கன மழை அல்லது மித கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில், “ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) தலைநகர் டெல்லியில் அதிகபடியான வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக் கூடும்.
குறிப்பாக ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும். அதேபோல் குஜராத், மத்திய மகாராஷ்டிரா, ஆந்திராவின் கடற்கரை பகுதிகள், ஏனாம், தெலங்கானா, கர்நாடகாவின் கடற்கரை மற்றும் உள்பகுதிகள், கேரளம், மாகே, தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சிக்கிம், அஸ்ஸாம், புதுச்சேரி, நாகாலாந்து, பிகார், ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, மத்திய மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் அதிக மின்னல்கள் தோன்றின.
இதையும் படிங்க : மின்னல் வெட்டும்போது செல்பி எடுக்கலாமா?