ETV Bharat / bharat

சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா கணக்கெடுப்பு கருவியை கண்டுபிடித்த ஐஐடி மெட்ராஸ்! - Survey Craft for Indian Ports and Inland Waterways

சென்னை: ஆழ்கடலின் தரவுகளை கணக்கிடுவதில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை நம்பி வந்த சூழ்நிலையில், சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா கணக்கெடுப்பு கருவியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

iit
it
author img

By

Published : Nov 23, 2020, 1:40 PM IST

இந்திய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவற்றுக்காக சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா தன்னாட்சி கணக்கெடுப்பு கருவியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி ஹைட்ரோகிராஃபிக் மற்றும் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நீண்ட தூரத்திற்கு நிகழ்நேர தரவு பரிமாற்றத்தை வழங்க முடியும்.

இதில் எக்கோ சவுண்டர், ஜி.பி.எஸ் சிஸ்டம் மற்றும் பிராட்பேண்ட் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, கடல்சார் பேலோடுகள்,360 டிகிரி கேமரா, லிடார் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கருவியின் முதல் சோதனை காமராஜர் துறைமுகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது, கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி (எஸ்.எம்.பி) துறைமுகத்தில் 2020 நவம்பரில் கடுமையான சூழலில் அடுத்தக்கட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் பணிக்காக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஐஐடி மெட்ராஸ் கலந்துரையாடி வருகிறது.

இதுகுறித்து பேசிய ஐ.ஐ.டி மெட்ராஸின் என்.டி.சி.பி.டபிள்யூ.சி பேராசிரியர் பேராசிரியர் கே. முரளி, "இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது வெளிநாட்டு தொழில்நுட்பத்தால் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கடல்சார் துறையில் நிச்சயமாக புதிய மாற்றத்தை கொண்டு வரும்.

ஆழமற்ற பகுதியிலும் கூட துல்லியமான அளவீடுகளை வழங்கும் திறன் கொண்டது. இதன் அளவு மற்றும் செயல்திறன் அதிகரித்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும்.

ஏனெனில் கப்பல்கள் பெரிதாகி வருகின்றதால், மிகவும் துல்லியமான தொழில்நுட்பத்தை வழங்கும் எடை குறைவான கருவிகளை உபயோகிக்கவே விரும்புகிறனர்.

துறைமுகங்கள், நீர்வழிகள், அணைகள், ஏரிகள், தடாகங்கள் மற்றும் பிற ஆழமற்ற நீர் மண்டலங்கள் போன்ற இடங்களில் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது ரிமோட்-கண்ட்ரோல் அமைப்பாலும் இயக்கலாம் அல்லது முழுமையான தானியங்கி வாகனமாகவும் இயக்கலாம். சூரிய ஆற்றல் உள்ளதால் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 5 முதல் பல மணி நேரம் தாங்கும் சக்தி கொண்டது" எனத் தெரிவித்தார்.

இந்திய துறைமுகங்களில் அலுவலர்கள் சந்திக்கும் சில சவால்களுக்கு இந்த கருவி உதவியாக இருக்கும். குறிப்பாக, ஆழமற்ற பகுதியிலும் தரவுகளை சேகரிக்க உதவுகிறது.

இந்த தொழில்நுட்பத்திற்கான சேலவுகளை குறைக்கிறது ஆகும். இந்த புதிய கருவி நிச்சயமாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை ஓரம்கட்டி இந்திய துறைமுகங்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.