ETV Bharat / bharat

பட்டனை தட்டினால் கையில் சுட சுட இட்லி...  ஏடிஎம் முறையில் இட்லி விற்பனை... அசத்தல் எந்திரம்...

author img

By

Published : Oct 17, 2022, 8:26 AM IST

பெங்களூருவில் ஏடிஎம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள எந்திரத்தின் மூலம் இட்லி விநியோகிக்கப்படுவது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

காசைத் தட்டினால் கையில் சுட சுட இட்லி.. ஏடிஎம் முறையில் அசத்தல் தொழில்நுட்பம்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிலேகல்லியில், ஃபிரஷ் ஷாட் (Fresh Shot) என்ற நிறுவனம் இட்லி தயாரிக்கும் தானியங்கி எந்திரத்தை (Idly ATM) அறிமுகப்படுத்தி உள்ளது. ஹீராமத் மற்றும் சுரேஷ் சந்திரஷேகரன் ஆகியோர் கண்டுபிடித்த இந்த எந்திரத்திற்கு ‘இட்லி போட்’ (Idly Boat) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் ரூ.25 முதல் ரூ.30 வரை செலுத்தி 2 இட்லிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஃபோடி இட்லி, பெரி பெரி இட்லி, இத்தாலியன் ஆயுர்வேத இட்லி, தானிய இட்லி மற்றும் சாக்லேட் இட்லி ஆகியவை கிடைக்கும். இவ்வாறு தயார் செய்யப்படும் இட்லிகள், 55 வினாடிகளுக்குள் தயாராகி வாடிக்கையாளர்களின் கைகளில் ருசி பார்க்க வந்தடையும். மேலும் தோசை மற்றும் பானிபூரி ஆகியவற்றை தானியங்கி முறையில் வழங்குவதற்கான ஆயத்த பணிகளை ஃபிரஷ் ஷாட் நிறுவனம் செய்து வருகிறது.

இட்லி தயாரிக்கும் தானியங்கி இயந்திரம்
இட்லி தயாரிக்கும் தானியங்கி எந்திரம்

அதேநேரம் இந்த உணவுகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களினால் செய்யப்பட்ட தட்டுகளில் வழங்குவது இந்நிறுவனத்தின் மேலும் ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.