ETV Bharat / bharat

மக்களுக்கும், ஸ்டாலினுக்கும் விமானப்படை நன்றி - குரூப் கேப்டன் வருண் சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப்பணி துரிதமாக நடைபெற உதவியாக இருந்த உள்ளூர் மக்கள், காவல் துறை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

IAF thank everyone involved in the Coonoor helicopter crash rescue,
IAF thank everyone involved in the Coonoor helicopter crash rescue
author img

By

Published : Dec 11, 2021, 1:56 PM IST

டெல்லி: கடந்த புதன் கிழமையன்று (டிசம்பர் 8) தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவப் பணியாளர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது பெங்களூருவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

மறைந்த பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் டெல்லி ராணுவ மரியாதைக்குப் பின்னர் தகனம்செய்யப்பட்டன. மறைந்த படைவீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதைக்குப் பின்னர் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.

  • IAF thanks the prompt and sustained assistance provided by the Office and Staff of @CMOTamilnadu, @collrnlg, Police officials and locals from Katteri village in the rescue and salvage operation after the unfortunate helicopter accident.

    — Indian Air Force (@IAF_MCC) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி

இந்நிலையில், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது, மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்திய விமானப்படை ட்வீட் செய்துள்ளது.

அதில், "தீவினையாக ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னான மீட்புப் பணியின்போது உடனடியாகவும், நீண்ட நேரமாகவும் உதவிய முதலமைச்சர், அவரின் அலுவலகப் பணியாளர்கள், நீலகிரி ஆட்சியர், காட்டேரி காவல் துறையினர், உள்ளூர் மக்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: கேரளா கொண்டுசெல்லப்படும் விமான படை வீரர் பிரதீப்பின் உடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.