ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21(Mig-21) போர் விமானம் குடியிருப்பு மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய மிக்-21 விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
அதேநேரத்தில் குடியிருப்பில் இருந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் குவிந்த பொதுமக்கள் பற்றி எரியும் விமானத்தை வேடிக்கை பார்த்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. Two civilian women died and a man was injured in the incident, the pilot sustained minor injuries. pic.twitter.com/z4BZBsECVV
— ANI (@ANI) May 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. Two civilian women died and a man was injured in the incident, the pilot sustained minor injuries. pic.twitter.com/z4BZBsECVV
— ANI (@ANI) May 8, 2023#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. Two civilian women died and a man was injured in the incident, the pilot sustained minor injuries. pic.twitter.com/z4BZBsECVV
— ANI (@ANI) May 8, 2023
சூரத்கர் விமானப்படைத் தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்குப் புறப்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுகோய்(Sukhoi-30) மற்றும் மீரஜ் 2000 போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.
அதேபோல், அண்மையில் மத்தியப்பிரதேச மாநிலம் மொரோனா பகுதியில் போர்ப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் ஓர் போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹனுமன்கர் பகுதியில் மிக் போர் விமானம் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Kerala Boat Accident: கேரள படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்வு!