ஹைதராபாத்: தெலங்கானாவில் கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியபோது, நேரு விலங்கியல் பூங்கா (NZP) மூடப்பட்டது.
தற்போது படிப்படியாக கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, 70 நாள்களுக்கு பின்னர் இந்த பூங்கா இன்று (ஜூலை 11) மீண்டும் திறக்கப்பட்டது.
முதல் நாளான இன்று சுமார் 2 ஆயிரத்து 536 பேர், பூங்காவிற்கு வருகை தந்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூங்காவின் வெவ்வேறு பகுதிகளில், சானிடைசர் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வலியுறுத்தப்பட்டனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமைமிக்க சித்தர்காடு கருவாட்டுச்சந்தை: 60 நாட்களுக்குப் பின் திறப்பு