ETV Bharat / bharat

ஹைதராபாத் தேர்தல்: சரிவு கண்ட கே.சி.ஆர்; பலம் கூட்டிய பாஜக; தக்கவைத்த ஓவைசி! - ஹைதராபாத் தேர்தல் முடிவுகள்

நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த விரிவான பார்வை

Hyderabad civic poll
Hyderabad civic poll
author img

By

Published : Dec 4, 2020, 10:11 PM IST

Updated : Dec 4, 2020, 11:01 PM IST

ஹைதராபாத் பெருநகர உள்ளாட்சி அமைப்பின்(GHMC- Greater Hyderabad Municipal Corporation)) தேர்தல் கடந்த 1ஆம் தேதி(டிச.1) நடைபெற்றது. நாட்டின் முக்கிய நகர்களில் ஒன்றாக ஹைதராபாத் திகழ்ந்தாலும், ஒரு மெட்ரோ நகரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கிய கவனம் பெற்றது. காரணம், இந்தத் தேர்தலில் பாஜக தனது முழுமையான பலத்துடன் களமிறங்கி தெலங்கானாவில் காலூன்ற வேண்டும் என களப்பணி செய்தது.

மாநிலத் தலைமை மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள் தொடங்கி, சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்கள், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது படைகளை ஹைதரபாத்தில் தீவிர பரப்புரை மேற்கொள்ள வைத்தது பாஜக.

ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் இலவச குடிநீர், இலவச மின்சாரம் என பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் வெள்ளம் பாதித்தவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கியது. அத்துடன் ஹைதராபாத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசியும் பாஜகவை ஹைதராபாத்தில் தடம் பதிக்க விட மாட்டோம் என தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், மொத்தமுள்ள 150 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று(டிச.4) அறிவிக்கப்பட்டன.

சரிவு கண்ட கே.சி.ஆர்.

தெலங்கானா மாநிலத்தை ஆளும் கே.சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி இந்தத் தேர்தலில் 56 இடங்களில் வென்று முதன்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேவேளை, 2016ஆம் ஆண்டில் தனது எதிர்த்தரப்பே இல்லாத அளவிற்கு மாநிலத்தில் பலம் கொண்டிருந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்தத் தேர்தலில் சரிவைக் கண்டுள்ளார். கடந்தமுறை, 99 இடங்களை கைப்பற்றி டி.ஆர்.எஸ். கட்சி இம்முறை 56 இடங்களை மட்டுமே வென்று சறுக்கலைக் கண்டுள்ளது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, பாஜகவின் பரப்புரை இந்த சறுக்கலுக்கான காரணிகளாகப் பார்க்கப்படுகிறது.

பலத்தை கூட்டிய பாஜக

தன்னை மையப்புள்ளியாக வைத்து தேர்தலில் களம்கண்ட பாஜக 49 இடங்களை கைப்பற்றி இரண்டாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த முறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக அதை 49ஆக உயர்த்தி மாநிலத்தில் முன்னணி எதிர்க்கட்சி என்று தன்னை தற்போது பிரகடனம் செய்துள்ளது. ஹைதராபாத்தை கைப்பற்றி நகரின் பெயரை பாக்கியநகராக மாற்றுவோம் என்று கூறிக்கொண்ட அக்கட்சியின் கனவு முழுமையாக நிறைவேறாவிட்டாலும், இந்த முன்னேற்றத்தை வைத்து அக்கட்சி அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை மாற்று சக்தியாக முன்னிறுத்தி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைத்த ஓவைசி:

கடந்த முறை 44 இடங்களில் வெற்றி பெற்ற ஓவைசியின் ஏ.எம்.ஐ.எம். கட்சி இம்முறை 43 இடங்களை வென்று தனது இருப்பை தக்க வைத்துள்ளது. ஏ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கோட்டையான ஹைதராபாத்தில் தனது பலத்தை தக்க வைக்க கடுமையான பரப்புரையில் ஈடுபட்டார்.

குறிப்பாக பாஜக தனது அமைச்சரவை படையை தெலங்கானாவில் களம் இறக்கியதை, இந்தத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும்தான் பரப்புரை செய்யவில்லையென ஓவைசி விமர்சித்தார். ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள ஓவைசி அந்நகரின் பாகுபலியாகக் கருதப்படுகிறார்.

இம்முறை அவரை குறிவைத்து மத ரீதியாக பாஜக எதிர் பரப்புரை செய்த நிலையில், 43 இடங்களை வென்று தனது இருப்பை தக்க வைத்துள்ளார். அத்துடன் மேயர் பதவிக்கு டி.ஆர்.எஸ். கட்சி இவரது ஆதரவை கோரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷ் அவுட்டான காங்கிரஸ்

2014ஆம் ஆண்டுவரை மாநிலத்தின் ஆளுங்கட்சி அந்தஸ்தில் இருந்த காங்கிரஸ் போட்டியிட்ட 150 இடங்களில் இரண்டு இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா-ஆந்திரா மாநில பிரிவினைக்கு முன் மாநிலத்தை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பிரிவினைக்குப் பின்னர் கே.சி.ஆரிடம் தோல்லியடைந்து எதிர்க்கட்சியாக மாறியது. தற்போது இந்த தேர்தல் முடிவுகள்படி தனது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பாஜகவிடம் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி சொத்து பிரான்ஸ் நாட்டில் பறிமுதல்!

Last Updated : Dec 4, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.