தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாஜகவுக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மாநகராட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, உஸ்மானியா பல்கலைக்கழக அலுவலர்களிடம் உரிய அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், தேஜஸ்வி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி மகேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பரப்புரையில் ஈடுபட்ட தேஜஸ்வி, முழு தென்னிந்தியாவும் காவிமயமாகும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக மீண்டுள்ளது: சக்திகாந்த தாஸ்