ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தீப்தி. இவர், உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் மென்பொருள் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்க நிதி நிறுவனமான ஜெபி மோர்கன் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்
இருப்பினும், கோடிங் மீதான ஆர்வத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்காவை நோக்கி தனது பயணத்தை திருப்பினார். அங்கு, ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் MS(computer) முதுகலை பட்டத்தை முடித்தார். அப்போது, கேம்பஸ் இன்ட்ரவியூவில் பல முன்னனி நிறுவனங்களில் பணியாற்ற தேர்வானாலும், தனக்கான கனவு வேலைக்காக காத்திருந்தார்.
கனவு கோட்டைக்குள் நுழைந்த ஹைதராபாத் மாணவி
எதிர்பார்த்தபடியே, உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்டில் கால் பதிக்கும் வாய்ப்பு தீப்திக்கு கிடைத்தது. அவருடன் பயிலும் மாணவர்களே ஆச்சரியம் படும் வகையில், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் அவர் தேர்வானார்.
300 மாணவர்களில் அதிக ஆண்டு வருமானம் பெற்ற தீப்தி
ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களில் அதிக ஆண்டு வருமானம் பெறுபவர் தீப்தி மட்டும்தான். அவர், மைக்ரோசாஃப்டின் கிரேடு 2 பொறியியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்டில் மாணவப் பணியாளர்
இதுமட்டுமின்றி கோல்டுமேன் சாக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்களிலிருந்தும் தீப்திக்கு வேலை வாய்ப்பு வந்தது. ஆனால், அவர் ஏற்கெனவே 2014-2015ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மாணவப் பணியாளராக இருந்ததன் காரணமாக, அதனை தேர்வு செய்தார்.
இதுதொடர்பாக தீப்தி தனது லிங்க்டின் பக்கத்தில், "அன்றாட பிரச்னைகளைத் தீர்ப்பதில் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. மனிதர்களின் வாழ்வை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன" எனக் குறிப்பி்ட்டுள்ளார்.
தீப்தியின் தந்தை ஹைதராபாத் காவல் துறையில் தடையவில் நிபுணராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
While the world is fighting Corona, Deepti daughter of our officer Dr. Venkanna got a job offer of Rs 2 crore in the USA. A matter of pride and encouragement for all of us. pic.twitter.com/cBScvaJTRz
— Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) May 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">While the world is fighting Corona, Deepti daughter of our officer Dr. Venkanna got a job offer of Rs 2 crore in the USA. A matter of pride and encouragement for all of us. pic.twitter.com/cBScvaJTRz
— Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) May 19, 2021While the world is fighting Corona, Deepti daughter of our officer Dr. Venkanna got a job offer of Rs 2 crore in the USA. A matter of pride and encouragement for all of us. pic.twitter.com/cBScvaJTRz
— Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) May 19, 2021
தீப்தியை பாராட்டிய ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார்
மாணவியைப் பாராட்டி அவருடன் ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார், காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "உலகமே கரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, எங்கள் சக ஊழியரான வெங்கண்ணாவின் மகள் தீப்திக்கு அமெரிக்காவில் ரூ .2 கோடி வேலை வாய்ப்பு கிடைத்தது. இது நம் அனைவருக்கும் பெருமை மற்றும் ஊக்கமளிக்கும் விஷயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களின் கண்ணீரை விட பிரதமரின் கண்ணீருக்கு மதிப்பு அதிகமா? - காங்கிரஸ் தாக்கு