டெல்லி: நகை பறிப்பில் ஈடுபட்டதாக மனைவி அளித்த புகாரில் முன்ஜாமீன் வழங்கக் கோரி கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அமீத் மகாஜான் தலைமையிலான அமர்வு, திருமணம், பரிசு உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்றும் அதை அவர்களின் அனுமதியின்றி வெளியே எடுக்கவும், விற்க மற்றும் அடகு வைக்க கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்தது.
தங்க நகை மட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்களை மனைவியின் அனுமதியின்றி எடுத்துச் செல்லவும் சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திருமணமான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றவும் கணவருக்கு உரிமை இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
டெல்லியைச் சேர்ந்த தம்பதி, குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கணவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மனைவி போலீசில் புகார் அளித்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முன்ஜாமீன் கேட்டு கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வீடுகளில் பிளேபாய் சர்விஸ் கார்டு வீசிய இளைஞர் கைது!