ETV Bharat / bharat

மனைவியை கருகலைப்பு செய்ய வற்புறுத்திய கணவன் மீது வழக்குப்பதிவு - forcing abortion in raipur

சத்தீஸ்கர் மாநிலத்தில் மனைவியை கருகலைப்பு செய்ய வற்புறுத்திய கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவியை கருகலைப்பு செய்ய வற்புறுத்திய கணவன் மீது வழக்கு

author img

By

Published : Nov 7, 2022, 10:24 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பூரணி பஷ்தியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், 8 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. அன்றிலிருந்து எனது கணவர் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்திவருகிறார். சில ஆண்டுகளுக்கு பின்பே அவர் என்னை வரதட்சணைக்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. அவருக்கு கோவாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளது. இதைக்கேட்டால் என்னை தாக்குகிறார். வீட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டுகிறார். இதனிடையே நான் கருவுற்றேன்.

அந்த கருவை பாலின பரிசோதனை செய்ய வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். இப்போது கருவை கலைக்க வற்புறுத்தி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும் எனது கருவையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் அவரது கணவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.