டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் 'ஹம் டூ, ஹமரே டூ' என்ற பாணியில் நாட்டை நால்வர் வழிநடத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து பதிலளித்த பாஜக மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ஹம் டூ, ஹமரே டூ என்பதன் மூலம் ராகுல் காந்தி தன்னை, தனது தாயாரை (சோனியா காந்தி), தனது சகோதரியை (பிரியங்கா காந்தி), தனது மைத்துனரை (ராபர்ட் வத்ரா) குறிப்பிட்டுள்ளார்.
கரோனா உருமாறி புதிய வகை வைரஸாக மாறிவருவது போல் ராகுல் காந்தியின் முழக்கமும் வேறு வடிவில் திரும்பிவந்துள்ளது. இந்த தேசத்தை ஒரு காலத்தில் நால்வர் வழிநடத்தினார்கள். அது யாரென்று மக்களுக்கு தெரியும். இது மக்களுக்கான அரசு” என்றார்.
இதையும் படிங்க: மக்களவையில் ராகுல், அனுராக் காரசார வாதம்!