பீகார்: கிழக்கு சம்பராண் மாவட்டத்தில் சர்வதேச கடத்தல்காரர்கள் இருவர் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 கிலோ போதை பொருள்கள் மற்றும் இரண்டு மான் கொம்புகளும் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறும் போது, " கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கபட்ட போதை பொருள்கள் மற்றும் மான் கொம்புகள் வெளிநாட்டு சந்தை மதிப்பு 2 கோடியாகும்.
கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த பி டாக்டர் குமார் ஆஷிஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “கடத்தல்காரர்களில் ஒருவரான இம்தியாஷ் ஆலியாஸ் அன்னா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் தான் இந்த குழுவுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் .கைதான மற்றொருவர் உமேஷ் ஷா கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் ரக்சால் நகரில் வசிப்பவர்.
இந்த இருவரும் சங்குலி பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் விசாரித்த போது பல உண்மைகள் தெரியவந்துள்ளன. இவர்கள் இருவரும் ரக்சால் நகரில் கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பங்களாதேஷ்,சீனா,நேபால்,மலேசியா,ஹாங்காங்,தாய்லாந்து,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கடத்தல் தொழிலை நடத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் இம்தியாஸ், சுறா துடுப்பு, கடல் அட்டைகள் , கடல் புழு, பல்லி, ஆமை உள்ளிட்ட பொருட்களை ரக்சால் நகரிலிருந்தே கடத்தி வந்திருக்கிறார்.
ரகசிய தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரக்சால் நகரிலிருந்து இருந்து ஏராளமான போதைப் பொருள்கள் வருவது குறித்து தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி சதர் அருண்குமார் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சுகௌலி ரக்சால் சாலையில் உள்ள ஹீரோ ஏஜென்சி அருகே காவல் துறையினர் கடத்தல்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்” என எஸ்பி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது