ஹூப்பள்ளி(கர்நாடகா): கர்நாடகா மாவட்டத்தில் உள்ள ஹூப்பள்ளியில் ஏப்.16 ஆம் தேதி நள்ளிரவில் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது 12 போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்து 40 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் வகுப்புவாத பிரிவினையாக மாறியது. மேலும் இரண்டு குழுக்கள் தங்களுக்குள் கல் வீச்சில் ஈடுபட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த கலவரத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.
AIMIM கர்நாடகா தலைவர் நசீர் அகமதிற்கும் தொடர்பு: இந்த நிலையில் காவல்துறையினர் நேற்று (ஏப்.23) AIMIM(அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்) கர்நாடக தலைவர் நசீர் அகமதிற்கும் இந்தக் கலவரத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்துள்ளனர். நசீர் அகமதுக்கு இந்த கலவரத்தில் நேரடியாக தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் நள்ளிரவில் காவல்நிலையம் மீது தாக்குதல், 12 காவலர்கள் காயம்